நடிகை நயன்தாராவை மிரட்டிய சிங்கப்பூர் துரைராஜ் - கோடம்பாக்கத்தில் பரபரப்பு!!!

Sunday, November 1, 2015
Chennai:தலைப்பை படித்தவுடன், தயாரிப்பாளரோ, பைனான்சியரோ என்று நினைத்துவிட வேண்டாம், இந்த சிங்கப்பூர் துரைராஜும் ஒரு நடிகர் தான். மிரட்டல் நிஜத்தில் அல்ல, 'நானும் ரெளடி தான்' படத்தில்.

20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டு, தற்போது 10க்கும் மேற்பட்ட புதிய படங்களில் நடித்து வரும் சிங்கப்பூர் துரைராஜ், தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரெளடி தான்' படத்தில் நடித்ததை தனக்கான ஒரு அடையாளமாக பார்க்கிறார். காரணம், படத்தில் இவருடைய வேடம் தான் பெரும் திருப்புமுனை.
பைத்தியக்காரன்  போன்ற வேடத்தில் மிக எதார்த்தமாக நடித்த சிங்கப்பூர் துரராஜியைப் பார்த்து நயன்தாரா பயப்படுவது போல காட்சி. இவர் நயன்தாராவிடம், அவருடைய தந்தை கொலை செயப்படுவதை சொல்ல வரும் நேரத்தில், இவருடைய தோற்றத்தைப் பார்த்து நயன்தாரா மிரண்டு போவார். அதே நிலையில், அப்பா உயிரிழந்ததையும், அவர் யாரால் கொலை செய்யப்பட்டார் என்பதையும் ரொம்ப எதார்த்தமாக நயன்தாராவிடம்  தெரிவிப்பார். இந்த காட்சி தான் படத்தின் முக்கிய திருப்புமுனை. இந்த காட்சியில் நடித்த சிங்கப்பூர் துரைராஜுக்கு, தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பாராட்டுக்கள் மட்டுமா, வாய்ப்புகளும் தான்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானாலும், தற்போது குணச்சிர நடிகராகவும், காமெடி வேடங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும், சிங்கப்பூர் துரைராஜுக்கு, மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
'இருவர் உள்ளம்', 'வெள்ளிக்கிழமை 13தேதி', 'முறியடி', 'அச்சமின்றி', 'திருப்பதி லட்டு', பார்க்கணும் போல இருக்கு' என இவர் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இன்னும் பல புதிய படங்களில் நடித்து வரும் சிங்கப்பூர் துரைராஜ், 'பாக்கணும் போல இருக்கு' படத்தில் சூரியுடன் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் காமெடி வேடங்களில் நடித்து வந்த சிங்கப்பூர் துரைராஜ், தற்போது, காமெடி, குணச்சித்திரம், வில்லன் ஆகிய வேடங்களில் நடித்து பேர் வாங்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று தெரிவித்துள்ளார்.

Comments