Friday, November 6, 2015
Chennai:தனது கணவர் தீபக் பாகா தயாரிக்கும் படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக நடிக்கவருகிறார் சிம்ரன். அப்படத்தின் முதற்கட்ட பணிகளில் இருந்தவரிடம் பேசினோம்.
Chennai:தனது கணவர் தீபக் பாகா தயாரிக்கும் படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக நடிக்கவருகிறார் சிம்ரன். அப்படத்தின் முதற்கட்ட பணிகளில் இருந்தவரிடம் பேசினோம்.
நீங்கள் மீண்டும் நாயகியாக நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்..
இது ஒரு அறிவியல் சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படம். நான் இதுவரை செய்த படங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும். இது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவெடுத்த பிறகு நான் பல கதைகளைக் கேட்டேன். இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. கேட்டவுடன் நடிக்க சம்மதித்தேன். பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ள கெளரி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். இப்படத்தை என் கணவர் தொடங்கியுள்ள ‘சிம்ரன் & சன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் என்னுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது, டிசம்பரில் படப்பிடிப்புக்கு செல்லவிருக்கிறோம்.
மீண்டும் நடிக்க வந்துவிட்டதால் உங்கள் குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்வீர்கள்?
எனது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். அவர்கள் பள்ளிக்கு சென்ற பிறகு எனக்கு வீட்டில் ஒரு வேலையும் இருக்காது. ஆகையால் மீண்டும் நடிக்க வந்துவிட்டேன். ஏற்கெனவே நான் தொலைக்காட்சிக்கு நிறைய நிகழ்ச்சிகளை செய்துகொண்டிருக் கிறேன். அதனால் நான் நடிப்பதால் குழந்தைகள் பாதிக்கப்பட மாட்டார்கள். நான் நடித்த பழைய படங்களை டி.விக்களில் பார்க்கும் என் குழந்தைகள், ‘மம்மி.. யூ லுக் வெரி ஸ்லிம்’ என்று சொல்வார்கள். அதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்து என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

இப்போதுள்ள நடிகைகளில் உங்கள் இடத்தை யார் பிடித்திருப்பதாக நினைக் கிறீர்கள்?
யாருடைய இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது. அவரவர்களுக்கான இடம் எப்போதுமே இருக்கும். அதுமட்டு மன்றி, இப்போதுள்ள நடிகைகள் மிகுந்த திறமைசாலிகளாக இருக்கிறார்கள். நான் நடிக்கும்போது என் உடலை ரொம்ப கட்டுக்கோப்பாக வைக்க மிகவும் சிரமப்பட்டேன். இப்போதுள்ள நடிகைகள் உடலை நன்றாக பராமரிக்கிறார்கள். அதைப் பார்க்கும்போதும், அவர் களுடைய கதைத் தேர் வைப் பார்க்கும் போதும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.
Comments
Post a Comment