அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அஜித்!!!

Saturday, November 14, 2015
Chennai:
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்துக்கு, காலி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஏற்கனவே அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்த கோவை மருத்துவர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்கள். இதையடுத்து ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் தங்கி அஜித் சிகிச்சைப் பெற்று வந்தார்.
தற்போது காலில் வலி குறைந்துள்ளதால், அஜித் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு அஜித்தின் வீட்டுக்கே மருத்துவர்கள் செல்வார்கள், என்று கூறப்படுகிறது.
தற்போது நடக்க முடியாத நிலையில் உள்ள அஜித், தான் முழுமையாக குணமடையும் வரை தன்னை யாரும் நலம் விசாரிக்க வேண்டாம் என்று, நட்பு வட்டாரங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

Comments