நடிகர் சங்க கணக்கில் குழப்பம்!!!

Saturday, November 14, 2015
Chennai:நடிகர் சங்க அறக்கட்டளையின், பல லட்சம் ரூபாய் செலவு கணக்குகளுக்கு ரசீதுகள் இல்லாததால், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, 'கோலி வுட்' வட்டாரங்கள் கூறியதாவது:நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்ற பின், நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர் பதவி, நடிகர் கமல் ஹாசனுக்கு வழங்கப்பட்டது. நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட குழு அமைக்கப்பட்டது. 10 ஆண்டுகளின், வரவு - செலவு கணக்கு வழக்குகளை சரிபார்க்க, ஆடிட்டர் தலைமையில், சிறப்பு தணிக்கை குழு நியமிக்கப்பட்டது.

நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் வரவு - செலவு தொடர்பான ஆவணங்களை, புதிய நிர்வாகிகளிடம், முன்னாள் தலைவர் சரத்குமார் வழங்கினார். அந்த ஆவணங்கள், சிறப்பு தணிக் கை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில், ஏற்கனவே செலவு செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய்க்கு, ரசீதுகள் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்ததும், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் சங்கம் சார்பில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த ஐந்து வங்கிகளின் கணக்குகளை தொடர புதிய நிர்வாகிகள் விரும்பவில்லை. சங்கம் சார்பில் புதிதாக, இரண்டு வங்கிகளில் புதுக்கணக்கு துவங்கப்பட்டுள்ளது.

Comments