Sunday, November 1, 2015
Chennai:மத சகிப்பு தன்மையற்ற நிலை எதிர்த்தும் மற்றும் வட மாநிலத்தில் திரைப்பட மாணவர்கள் சில கோரிக்கைகள் வலியுறுத்தி நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எழுத்தாளர்கள், திரைத் துறையினர் சிலர் சாகித்ய அகடமி விருது மற்றும் தேசிய விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

அதுபோல் தேசிய விருதை திருப்பி அளிப்பீர்களா என்று சமீபத்தில் நடிகை ஷோபனாவிடம் கேட்டபோது,‘விருதை திருப்பி தரும் எண்ணம் இல்லை’ என்றார். அதேபோல் நடிகை வித்யாபாலனும் விருதை திருப்பி தர மறுத்தார். கடந்த 2012ம் ஆண்டு தி டர்ட்டி பிக்சர்ஸ் ்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
இதுபற்றி வித்யாபாலன் கூறியது: எனக்கு கிடைத்த விருது தேசத்தால் வழங்கப்பட்டது. அரசால் வழங்கப்பட்டது அல்ல. எனவே விருதை திரும்ப வழங்க வேண்டியது இல்லை. எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. அப்படியே சேர்ந்தாலும் மோசமான தோல்வியைத்தான் சந்திப்பேன் என்றார்.
Comments
Post a Comment