மறைந்த நடிகை மனோராமவால் தொடங்கப்பட்ட அழகிப் போட்டி 'அழகிய தமிழ் மகள்'!!!

Friday, October 30, 2015
Chennai:ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து, கின்னஸ் சாதனைப் புரிந்த நடிகை மனோரமா, சமீபத்தில் திரையுலகை மட்டும் இன்றி, பூமியை விட்டே பிரிந்தார். அவருடைய இந்த பிரிவு திரை ரசிகர்களை பெரிதும் பாதித்தாலும், அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அழகிப்  போட்டி ஒன்றின் மூலம், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒரே பண்பாட்டின் கீழ் முனைப்பாய் செயல்பட இருக்கிறார்கள்.

அழகிய தமிழ் மகள்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, அழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி என்றால் அது மிகையாகாது. மூலம் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் தமிழ் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் பாராட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில், 'அழகிய தமிழ் மகள்' என்ற பட்டத்துடன், மேலும் 15 பட்டங்களை வெல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாத இதழான 'வாவ் செலிப்ரேசன்', நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்திற்காக இயங்கும் 'டேக் கேர் இந்தியா' என்ற நிறுவனத்துடன் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது.

மூன்று சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன. 18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit என்னும் வலை தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மறைந்த நடிகை மனோரமா, தனது மறைவுக்கு முன்பு 'அழகிய தமிழ் மகள்', உலக தமிழ் பெண்கள் அழகிப் போட்டியின் லோகோ மற்றும் போட்டியை துவக்கி வைத்தார்.

பல்லாயிரகணக்கான தமிழர்களை ஒரே பண்பாட்டு தளத்தில் இணைக்கும் ஒரு நிகழ்வாக நடைபெற உள்ள இந்த போட்டியில், கருண் ராமன் ((ஃபேஷன் வடிவமைப்பாளர்), நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரையுலகம் மற்றும் பேஷன் வடிவமைப்பு துறையைச் சார்ந்த பல பிரமுகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.

Comments