நாளை நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் செயற்குழுக் கூட்டம்!!!

24th of October 2015
சென்னை:நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், சரத்குமார் தலைமையிலான அணிக்கும், நாசர் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

குற்றச்சாட்டுக்கள், விமரிசனங்கள் என இரு தரப்பிலும் இருந்து வந்ததால், தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும். பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் வெற்றிபெற்றுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம் நாளை (அக்டோபர் 25) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments