அஜித்தின் ‘வேதாளம்’ பாட்ஷா படத்தின் ரீமேக்கா? - கசிந்த உண்மை!!!

20th of October 2015
சென்னை:அஜித் நடிப்பில், ‘சிறுத்தை’ பட இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘வேதாளம்’ படத்தின் போஸ்டர், டீசர் என்று ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் நேற்று இரவு வெளியான பாடலின் டீசரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘வேதாளம்’ படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் அஜித் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் கொல்கத்தாவில் சாதுவாக வருவாராம். அதன் பிறகு பிளாஸ்பேக்கில், டானாக வருவாராம். ஒட்டு மொத்தத்தில் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் ரீமேக் என்று சொல்லும் அளவுக்கு, ‘வேதாளம்’ படத்தின் கதை உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க, தங்கையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். அஜித்தின் அப்பாவாக தம்பி ராமைய்யா நடித்துள்ளார்.
அனிருத் இசையைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாக உள்ளது. படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது.

Comments