என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா” – ‘இஞ்சி இடுப்பழகி’யின் செல்ல சிணுங்கல்!!!

Friday, October 30, 2015
Chennai:வசந்தமாளிகை’ படத்தை இயக்கியவரின் பேரன் என்கிற அடையாளத்துடன், அவருடைய பெயரிலேயே ‘இஞ்சி இடுப்பழகி’ படம் மூலமாக தமிழ்சினிமாவில் அடியெ 
டுத்து வைத்துள்ளார் தெலுங்கு இயக்குனரான கே.பிரகாஷ்ராவ். இரண்டாம் உலகத்தை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை இந்தப்படத்தின் மூலம் மூன்றாவது உலகத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்கள் ஆர்யாவும் அனுஷ்காவும்..
இந்தப்படத்திற்கான தனது உடலை குண்டாக்கிய அனுஷ்காவின் உழைப்பு நாடறிந்தது.. நல்லவேளை இன்று நடைபெற்ற இந்தப்படத்தின் ஆடியோ ரிலீசின்போது ஸ்லிம் பியூட்டியான அனுஷ்காவை பார்த்தபோதுதான் அப்பாடா என மூச்சே வந்தது.. லேடி கமல், லேடி விக்ரம் ரேஞ்சிற்கு அனுஷ்கா பின்னி பெடலெடுத்திருக்கிறார் என்பது ட்ரெய்லர் மற்றும் டீசரிலேயே தெரிந்தது.
 
இந்த இசைவெளியீட்டு விழா தான் நடிகர்சங்க தலைவராக பொறுப்பேற்றபின் நாசர் கலந்துகொள்ளும் முதல் விழா.. ஆனால் அவர் இங்கே வந்தது தலைவராகவோ, அல்லது ஒரு நடிகராகவோ இல்லையாம்.. அவரது மகளுக்காக வந்தாராம்.. மகளா..? வேறு யார்.. அனுஷ்கா தான்.. அந்த தெய்வத்திருமகளை தனது மகளாக எப்போதோ சுவீகாரம் எடுத்துக்கொண்டு விட்டாராம் இந்த தந்தை.
ட்ரெய்லரில் அனுஷ்காவின் அதிரடிகளை பார்த்தபோது, “என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா” என செல்ல சிணுங்கல் மூலம் அவரும் தன் பங்கிற்கு லட்சுமி ராமகிருஷ்ணனின் பிபியை இன்னும் கொஞ்சம் எகிறவைத்திருப்பார் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. இந்த இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மோகன்ராஜா, மகிழ்திருமேனி, இசையமைப்பாளர் மரகதமணி, ஞானவேல்ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
படத்தில் அனுஷ்காவின் உருவத்தை போன்று, உண்மையிலேயே இருக்கும் காமெடி ஆர்த்தி இந்த விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும்., ‘போக்கிரி’யில் அசினின் தம்பியாக வந்த ‘உப்புமா’ பையன் பரத் இந்தப்படத்தில் ஸ்லிம்மாக ஆளே மாறி, அனுஷ்காவுக்கு தம்பியாக நடித்துள்ளதும் என இந்த விழாவில் இரண்டு விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தின..

Comments