ரஜினி மட்டுமல்ல விஜய்யோ அஜித்தோ யார் வந்தாலும் கமலுக்கு ஆப்பு நிச்சயம் .. விவரம் உள்ளே!!!

21st of October 2015
சென்னை:கமல்ஹாசனுக்கு இணையதள ரசிகர்கள் இருப்பது மிகக்குறைவு தான். ஆனால், அஜித் விஜய் ரசிகர்கள். தான் பெரும்பாலும் ரஜினி, கமலுக்கு சப்போர்ட் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இவர் நடித்த தூங்காவனம் பட டிரைலர் வெளியான போது சிறிது நேரம் டிரண்டிங்கில் இருந்தது.

பிறகு கபாலி ஃபர்ஸ்ட் லுக் வந்ததும் தூங்காவனம் இருந்த இடம் தெரியாமல் போனது.
 
எங்கு பார்த்தாலும் கபாலி ஜாலம் தான். இது கமலுக்கே சற்று வருத்தத்தை கொடுத்தது.
 
இந்தமுறை கமல் இணையதளத்தை மட்டும் நம்பாமல் தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் சுமார் 100 திரையரங்குகளில் தூங்காவனத்தின் பாடலை நேரலையாக வெளியிட்டார்.
என்னதான் புதுமை புகுத்தினாலும், இந்த விஷயம் மக்களிடம் சென்றடைவதற்குள் அஜித்தின் வேதாளம் டீசர் வெளியானது. சொல்லவா வேண்டும்… அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடுவதற்கும், விஜய் ரசிகர்கள் அதை கலாய்ப்பதற்கும் சென்றுவிட்டனர்.
 
கமலில் தூங்காவனம் ஒரே அடியாக தூங்கிவிட்டது. படம் வெளியாகும் போதாவது போட்டியில்லாமல் இருக்குமா? அல்லது இரவோடு இரவாக போட்டிக்கு வேறு ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகுமா? என கமல் ஆடிப்போய்விட்டதாக சொல்லப்படுகிறது.

Comments