27th of October 2015
சென்னை:அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வேதாளம்' தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ளது. அஜித்தின் முந்தையப் படமான 'என்னை அறிந்தால்' எதிர்ப்பார்த்த வெற்றி பெறாததால், இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி அஜித்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக, அவருடைய மேனஜரின் டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியானது. இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு எற்பட்டது. திரையுலக பிரமுகர்கள் அஜித்துக்கு போன் செய்து நலம் விசாரித்தனர். பிறகு இது வதந்தி என தெரிய வந்ததது.
இது குறித்து அஜித்தின் மேனஜர் விளக்கம் அளிக்கையில், "அஜித் பற்றி இதுபோன்ற போலியான தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனது டுவிட்டர் பக்கம் போலவே போலி கணக்கு தொடங்கி இந்த செய்தியை வெளியிட்டு இருந்தனர்.
இந்த தவறான தகவலை எனது பெயரில் வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடித்து விட்டோம். ஆதாரங்களை திரட்டி வருகிறோம். என் பெயரில் போலி டுவிட்டரில் கணக்கு தொடங்கி அஜித் பற்றி வதந்தி பரப்பியவர் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment