தனி ஒருவன்’ இந்தி டீமேக்கில் நான் நடிக்கவில்லை: மாதவன்!!!

24th of October 2015
சென்னை:மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தில் அர்விந்த்சுவாமி, வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். பலரது பாராட்டையும், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் ஆகிறது.

தெல்ங்கில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார். அதேபோல இந்தியில் சல்மான்கான் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்தி ரீமேக்கில் அரவிந்த்சுவாமி வேடத்தில் மாதவன் நடிப்பதாக செய்திகள் வெளியாயின. ஆனால், இதை மறுத்துள்ள மாதவன், நான் எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை, என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாதவன், “நான் எந்த புதிய படத்திலும் நடிக்கவும் இல்லை, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இல்லை. இப்போது எனது வாழ்க்கை 'இறுதிச்சுற்று' மற்றும் 'சாலா காடூஸ்' படங்களைச் சுற்றி மட்டுமே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Comments