பத்து எண்றதுக்குள்ள’ வசூல் சர்ச்சை!!!

24th of October 2015
சென்னை:விக்ரம், சமந்தா நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பத்து எண்றதுக்குள்ள. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல், ரூ. 6.50 கோடி என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு இணையத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நானும் ரெளடிதான் படம் நல்ல விமரிசனங்களைப் பெற்றுள்ளது. அந்தப் படம் முதல் நாளன்று ரூ. 2.16 கோடி ரூபாயை வசூலித்த நிலையில் இந்தப் படத்துக்கு எப்படி இவ்வளவு வசூல் கிடைக்கும் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பத்து எண்றதுக்குள்ள படத்தைத் தயாரித்துள்ள ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இந்தியா நிறுவனம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
 
இணையத்தளங்களில் வசூல் நிலவரம் குறித்து கருத்துகள் வெளியாகி உள்ளன. வசூல் விவரம் குறித்து சினிமா வர்த்தகர்கள் மற்றும் திரையரங்குகளில் விசாரித்துவிட்டு கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் எங்களது வசூலில் உறுதியாக இருக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Comments