இளையராஜாவை முந்திய யுவன் சங்கர் ராஜா!!!

29th of October 2015
சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழும், யுவன் சங்கர் ராஜா, தற்போது ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார். ஆம், ‘ஊல்ஃபீல்’ (Woolfell ) என்ற ஆங்கிலப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் மேலும் சில இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். தற்போது இப்படத்தில் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை யுவன் சங்கர் ராஜா, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் படங்களுக்கு மேல், பல்வேறு இந்திய மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவனின் அப்பாவான இளையராஜா, இதுவரை வெளிநாட்டு படங்களுக்கு இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த விஷயத்தில் யுவன் தனது தந்தையை முந்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

Comments