அஜித் பற்றி வாட்ஸ் அப்பில் வெளியான தகவல்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.. கலங்கிப் போன அஜித் ரசிகர்கள்!!!

25th of October 2015
சென்னை:அஜித் நடித்த வேதாளம் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.
 
இதனால் அவர் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட போகவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8.45 மணிக்கு வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வெளியானது. அதில் ‘நடிகர் அஜித்துக்கு திடீர் மாரடைப்பு. அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். உடல் நலம்பெற பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல் மின்னல் வேகத்தில் பரவியது. திரை உலகமே பரபரப்பானது. அஜித் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அதுபற்றி ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொண்டனர். சிறிது நேரத்துக்குப்பிறகு அந்த தகவல் உண்மையல்ல புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
 
இந்த செய்தியை யாரும் பரப்பி விட வேண்டாம். அது புரளி என்று 8.50 மணிக்கு வாட்ஸ்அப்பில் மற்றொரு தகவல் வெளியானது.
அஜித் தரப்பில் அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில் அஜித் நலமாக இருக்கிறார். புரளியை நம்ப வேண்டாம். வேண்டும் என்றே தவறான எண்ணத்துடன் அதை பரப்பி விட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்து இருந்தார்.
 
அதன்பிறகே திரை உலகிலும், ரசிகர்களிடமும் ஏற்பட்டிருந்த பரபரப்பு அடங்கியது. இந்த செய்தியை அதிகாரப்பூர்வ செய்தி போல பரப்பியது யார்? எதற்காக இந்த புரளியை கிளப்பி விட்டார்கள் என்பது குறித்து அஜித் தரப்பினர் விசாரித்து வருகிறார்கள்.

Comments