படங்களை கலாய்க்கும் விஜய்-அஜித் ரசிகர்களுக்கு விஜய் வைக்கும் ஆப்பு?!!!

24th of October 2015
சென்னை:விஜய் படம் வருகிறது என்றால் திருவிழா தான். அந்த வகையில் சமீபத்தில் வந்த புலி திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடினாலும், நடுநிலை ரசிகர்களுக்கு படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு அமையவில்லை. இதுமட்டுமில்லாமல் பலரும் இந்த படத்தை கிண்டல் செய்யும் வகையில் மிமிக்களை உருவாக்கி வருகின்றனர்..

அதாவது அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் இல்லை வெறியர்கள் விஜய் ரசிகர்கள் அஜித்தை அசிங்க படுத்துவதையும் அஜித் ரசிகர்கள் விஜய்யை அசிங்க படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லை உலக ரசிகர்களிடம் போய் சேருகிறது, நம்ம வீட்டு சண்டை உலகம் முழுவதும் தெரிகிறது இந்த அசிங்கம் வேண்டுமா ரசிகர்கள் தான் அடித்து கொள்ளகிறார்கள். நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம். இதனால் இதற்கு முற்று புள்ளி வைக்க புதிய யுக்தியை எடுத்துள்ளார்.
 
தற்போது வந்த தகவலின் படி விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் புது முயற்சி ஒன்றை எடுக்கவிருக்கின்றாராம் அது என்னவென்றால் தன்னை சமூக வலைத்தளங்களில் கலாய்ப்பவருக்கு பதிலடி தரும் வகையில், விஜய், தன் படங்களின் தவறுகளை தானே கலாய்ப்பது போல் ஒரு சில காட்சிகள் அட்லீ படத்தில் வருமாம். இவை கண்டிப்பாக ஒரு புது முயற்சி மட்டுமில்லாமல், பலரும்க்கு பதிலடியாக அமையும்.

Comments