நயன்தாரா தான் எனக்கு வில்லி” – குழப்பிவிட்ட பார்த்திபன்!!!

21st of October 2015
சென்னை:விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நாளை வெளியாக இருக்கும் ‘நானும் ரௌடி தான் படத்தில் ஹீரோ விஜய்சேதுபதி என்பது தெரியும்… கதாநாயகி நயன்தாரா.. ஒகே.. அப்படின்னா வில்லன் யாரு..?

படத்தின் ட்ரெய்லரை பார்த்த அனைவரும் பார்த்திபனைத்தான் வில்லனக நினைப்பார்கள். அவரும் ‘இந்த இடத்துல நான்தான் வில்லன்’ என வசனமும் பேசியிருக்கிறார்.
ஆனால் நேற்று நடந்த இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பார்த்திபன், “இந்தப்படத்துல நீங்கதான் வில்லனான்னு கேட்குறாங்க…. நான் வில்லனா அப்படின்னு சொல்றத விட, விஜய்சேதுபதி எனக்கு வில்லன், நயன்தாரா எனக்கு வில்லி அப்படின்னு வேணும்னா சொல்லலாம்” என கொஞ்சம் குட்டையை குழபிவிட்டுள்ளார். எப்படியும் நாளை தெரியத்தானே போகிறது.

Comments