21st of October 2015
சென்னை:விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சரித்திரப் படமான ‘புலி’ படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறாததால், படம் பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சரித்திரப் படமான ‘புலி’ படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறாததால், படம் பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில்,
தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், என்று விநியோகஸ்தர்கள் விஜயிடம்
முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விநியோகஸ்தர்கள் சிலர் கூறுகையில், “விஜய் நடிப்பில்
வெளியாகும் முதல் சரித்திரப் படம் என்பதால், ‘புலி’ படத்தினை அதிக தொகைக்
கொடுத்து வாங்கினோம். ஆனால், படம் வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு
வசூல் சரியில்லாததால், எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நஷ்டஈடு வழங்குவது குறித்து விஜயிடம் பேச்சு வார்த்தை
நடத்தியுள்ளோம். விரைவில் முடிவு தெரியும்” என்று தெரிவித்துள்ளனர்.
‘லிங்கா’ படத்தின் போது ரஜினிக்கு ஏற்பட்ட அதே நெருக்கடி விஜய்க்கு
ஏற்பட்டுள்ளது. ஆனால், ரஜினி விஷயத்தில் பகிரங்கமாக நஷ்டஈடு கேட்ட
விநியோகஸ்தர்கள் விஜயிடம், மறைமுகமாக கேட்டு வருகிறார்கள், என்பது
குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment