அதிக சம்பளம் வேண்டும்... அடம்பிடிக்கும் இளம்நடிகை!!!

25th of October 2015
சென்னை: மேகமான அந்தப் படத்தில் இடம்பெற்ற பழைய பாடலுக்கு நடிகை ஆடிய நடனத்தை விட அவரது கன்னக்குழியை பார்த்து ரசித்தவர்களே அதிகம். மிக நீண்ட காலம் கழித்து கன்னத்தில் குழியுடன் ஒரு நடிகை நடிக்க வந்தால் நமது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பார்களா என்ன, நடிகையை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் நமது ஊர் ரசிகர்கள்.
 
சமீபத்தில் நடிகை நடித்த படம் ஹிட்டானதில் 10 லட்சமாக இருந்த தனது சம்பளத்தை தற்போது சர்ரென்று உயர்த்தி விட்டாராம். ஆமாம் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நடிகையை தனது அடுத்த படத்திற்கு புக் பண்ண வந்திருக்கிறார். அவரிடம் சம்பளமாக 50 லட்சம் கேட்டு அடம்பிடித்தாராம் நடிகை எல்லாம் குழி படுத்தும் பாடு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். உடனே தவறாக எண்ணி விடாதீர்கள் இவருடைய கன்னக்குழியை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்களாம். அதனால்தான் கன்னக்குழியை நம்பி சம்பளத்தை 5 மடங்காக உயர்த்தி இருக்கிறார் நடிகை.

Comments