விஷ்ணு – சூரி இருவரையும் கைநீட்டிய நிக்கி கல்ராணி!!!

24th of October 2015
சென்னை:யாகாவாராயினும் நா காக்க’ படத்தில் கடைக்கு போய் காண்டம் வாங்குவது, ரவுடிகளின் மீது பெட்ரோலை வீசுவது என அதிரடியாக என்ட்ரி கொடுத்திருப்பார் நிக்கி கல்ராணி. அதேபோல தற்போது எழில் இயக்கத்தில் நடித்துவரும் நிக்கி, தனது அறிமுக கட்சியின்போதே ஐந்து ரவுடிகளை அடித்து நொறுக்கியபடி தான் என்ட்ரி ஆகிறாராம்.

காரணம் படத்தில் அவர் போலீஸ் கேரக்டரில் நடிப்பதுதான் இதில் விஷ்ணு, காமெடியன் சூரி இருவரையும் வேறு அடித்து விடுகிறாராம். ஆனால் ஒவ்வொருமுறை இவர் போலீஸ் யூனிபார்மில் என்ட்ரி ஆகும் காட்சியை பார்த்ததும் விஷ்ணுவுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தாலும் அவருக்கு நிக்கியிடம் அடிவாங்குவதை தவிர வேறு வழி இல்லையாம். வழக்கமாக வந்துபோகும் ஹீரோயின் வேடங்கள் போல இல்லாததால் இந்த கேரக்டரை ரொம்பவே ரசித்து பண்ணுகிறாராம் நிக்கி கல்ராணி.

Comments