23rd of October 2015
சென்னை:அம்மா போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதால், சிறு வயது முதலே காவல் நிலையத்திற்கு சென்று வந்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, படித்த பிறகு ரவுடியாவதா அல்லது போலீசாவதா என்ற குழப்பத்தில் இருக்க, ரவுடி தான் சரியான சாய்ஸ், என்று அட்வைஸ் செய்யும் நான் கடவுள் ராஜேந்திரன், அதற்கான காரணத்தையும் விஜய் சேதுபதியிடம் சொல்ல, அங்கே முடிவு செய்கிறார் பெரியவனான பிறகு ரவுடியாக வேண்டும் என்று.
சென்னை:அம்மா போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதால், சிறு வயது முதலே காவல் நிலையத்திற்கு சென்று வந்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, படித்த பிறகு ரவுடியாவதா அல்லது போலீசாவதா என்ற குழப்பத்தில் இருக்க, ரவுடி தான் சரியான சாய்ஸ், என்று அட்வைஸ் செய்யும் நான் கடவுள் ராஜேந்திரன், அதற்கான காரணத்தையும் விஜய் சேதுபதியிடம் சொல்ல, அங்கே முடிவு செய்கிறார் பெரியவனான பிறகு ரவுடியாக வேண்டும் என்று.
அதன்படி வளர்ந்து பெரியவராகும் விஜய் சேதுபதி, பள்ளி மாணவர்களின் காதலை
சேர்த்து வைப்பது, அடிக்க வேண்டியவரிடம் சென்று அடி வாங்கினது போல நடிக்க
சொல்வது, என்று சம்பவங்கள் பலவற்றை செய்து நானும் ரவுடி தான் என்று வலம்
வருகிறார். போலீஸ் அம்மாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார் என்று,
யாருக்கும் தெரியாமல் இருட்டு ரூமில் தனது ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தும்
விஜய் சேதுபதி, நயந்தராவை கண்டதும் காதல் கொள்கிறார். காது கேட்காத
நயந்தாரா, வெளியே போன தந்தை வீடு திரும்பாததால் வருத்தத்தில் இருக்க, அந்த
கேப்பை பயன்படுத்தி உதவி செய்வதாக கூறி அவருடன் நட்பு பாராட்டுகிறார் விஜய்
சேதுபதி.
அப்பாவை வில்லன் பார்த்திபன் கொலை செய்ததை அறிந்துக் கொள்ளும் நயந்தாரா,
விஜய் சேதுபதியிடம், தனது அப்பாவை கொலை செய்த பார்த்திபனை, தான் கொலை
செய்ய வேண்டும், அதற்கு உதவி செய்தால் உன் காதலை ஏற்றுக்கொள்கிறேன், என்று
விஜய் சேதுபதியிடம் சொல்கிறார்.
நயந்தராவின் ஒப்பந்தத்தை ஏற்கும் டம்மி டானானா விஜய் சேதுபதி, ஒரிஜினல்
டானானா பார்த்திபனை எப்படி வீழ்த்தி, நயந்தாராவை தனது தோலில்
சாய்த்துக்கொள்கிறார், என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக
சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஷ்ணு சிவன்.
அடுத்ததுத்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய் சேதுபதியை தூக்கி
நிறுத்தும் அளவுக்கு கமர்ஷியல் கரம் மசாலாவாக அமைந்துள்ளது இப்படம்.
பீட்சாவில் பார்த்த விஜய் சேதுபதியை நினைவுப் படுத்தும் கெட்டப்பும், அவர்
டயலாக் பேசும் விதமும் நன்றாக அமைந்துள்ளது. ஆக்ஷன் மற்றும் காமெடிக்கு
கச்சிதமாக பொருந்தும் விஜய் சேதுபதி, இந்த படத்தில் காதல் காட்சிகளில் கூட
கலக்கியிருக்கிறார்.
காது கேளாத கதாபாத்திரத்தில் நயந்தாரா ரொம்ப நன்றாகவே
நடித்திருக்கிறார். மற்றவர்கள் பேசுவதை கவனிக்கும் விதமும் அதற்கு அவர்
பதில் அளிக்கும் காட்சிகளில் நடிப்பில் முதுமையை காட்டும் நயந்தாரா
அவ்வபோது முகத்திலும் முதுமையை காட்டுகிறார். இந்த படத்தில் தான் அம்மனி
முதல் முறையாக சொந்த குரலில் பேசியிருக்கிறாராம். மலையாள வாடை இல்லாத அவரது
தமிழ் உச்சரிப்பு கேட்பதற்கு இனிமை. இதையே தொடராலாமே.
ஹீரோவாக நடிக்கும் படங்களில் வில்லத்தனமாக பேசி மொக்கைப்போடும்
பார்த்திபன், இந்த படத்தில் வில்லனாகவே நடித்திருப்பதால் ரசிக்க
முடிகிறது.
விஜய் சேதுபதிக்கு அம்மாவாக அளவான நடிப்பின் மூலம் அசத்துகிறார் ராதிகா.
தனது மகனை மற்றவர்களிடம் ”கொத்தமள்ளி கொழுந்துடி என் புள்ள” என்று
சொல்லும் போதும், போலீஸ் தேர்வுக்காக தனது மகனுக்கு ரெக்கமன்ட் செய்யும்
இடத்திலும் ரசிக்க வைக்கிறார்.
ரேடியோவில் பேசி பேசி மக்களை கொன்ற, இவர் திரைப்படங்களின் மூலமாகவும்
கொல்ல வந்துவிட்டாரே, என்று அலரிய ரசிகர்களுக்கு இப்படத்தின் மூலம் பெரிய
ஆறுதலை அளித்துள்ளார் ரேடியோ ஆர்.ஜே பாலாஜி. இவருக்கு இணையாக சிரிப்புக்கு
100 சதவீதம் உத்ரவாதம் தருகிறார் ’நான் கடவுள்’ ராஜேந்திரன். ஒரு சில
காட்சிகளில் வந்தாலும், அவருடைய அந்த “மியா...மியா...” துப்பாக்கி,
திரையரங்கையே அதிரவைக்கிறது. போதாத குறைக்கு, 80 களில் கொடூர வில்லனாக
திகழ்ந்த ஆனந்த்ராஜ் கூட, இந்த படத்தில் குழந்தைகளுக்கு பிடித்த காமெடி
நடிகராகியிருக்கிறார்.
படத்தில் காமெடி எந்த அளவுக்கு பலமோ, அதே அளவுக்கு அனிருத்தின் இசையும்
பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசை இரைச்சலாக இருந்தாலும், பாடல்கள்
அனைத்துமே இனிமையாக உள்ளது.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. பாடல்களில்
மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த பாண்டிச்சேரியை, முழு படத்திற்காகவும்
வில்லியம்ஸ் படமாக்கிய விதம் அருமை. பெண்கள் வெறுக்கும் மதுபானக் கடைகளைக்
கூட ரசிக்கும்படியாக காட்டியிருக்கிறது இவருடைய கேமரா,
(பாண்டிச்சேரியாச்சே)
கதை என்னவாக இருந்தாலும், அதை படமாக்கப்பட வேண்டிய விதமும்,
திரைக்கதையும் நேர்த்தியாக இருக்க வேண்டும், என்பதை தனது இரண்டாம் படத்தின்
மூலமாக மிக நன்றாகவே புரிந்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ்
சிவன், 100 சதவீத பொழுதுபோக்கு படமாக மட்டுமே இப்படம் இருக்க வேண்டும்
என்பதில் முழு கவனத்தையும் செலுத்தியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன்,
நயந்தாராவின் அம்மா, அப்பாவை கொலை செய்த வில்லனை கொலை செய்வதற்கான
வாய்ப்பில் கூட, நயந்தாராவை வைத்து சிறு காமெடி செய்ய முயற்சிக்கிறார்.
மொத்தத்தில் ‘நானும் ரவுடிதான்’ படம், நானும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் காமெடியன் தான் என்ற ரீதியில் உள்ளது.
Comments
Post a Comment