சச்சுவின் குறை தீர்த்த பாண்டவர் அணி!!!

21st of October 2015
சென்னை:நடிகர்சங்க தேர்தல் முடிந்து விஷால் அணி வெற்றிபெற்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். நேற்று முதற்கட்டமாக நடிகர்சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின் நடிகர்சங்க அலுவலகத்திற்கு வந்த பாண்டவர் அணியினர் முதல் நடவடிக்கையாக சீனியர் நடிகை சச்சுவிற்கு வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கி அவரின் மனக்குறையை தீர்த்தனர்..

நடிகர்சங்க தேர்தலின்போது அவரது உறுப்பினர் கார்டு காலாவதி ஆகிவிட்டதால் அவரது பெயர் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் விபரத்தை அறிந்து சீனியர் நடிகையான தனக்கே இந்த கதியா என மிகவும் மனம் வருந்தினார் சச்சு. இப்போது விஷால் அணியினர் அவரை கௌரவித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Comments