நடிகர் சங்க தேர்தலில் அஜித் ஓட்டு போடாதது ஏன்? - கலகலப்பு கமெண்ட்!!!

20 October 2015
சென்னை:நேற்று முன் தினம்நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் விஷால் அணியின் அமோக வெற்றி பெற்றனர். வாக்குப் பதிவில், ரஜினிகாந்த், கமல், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நேரில் வந்து ஓட்டு போட்டனர்.

முன்னணி நடிகைகளான திரிஷா, நயந்தரா உள்ளிட்ட பலர் ஓட்டு போடவில்லை. இந்த பட்டியலில் நடிகர் அஜித்தும் ஒருவர்.
சட்டசபை உள்ளிட்ட பல தேர்தலில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று (கோட் சூட்) போட்டு ஓட்டு போட்ட அஜித்குமார், தனது தொழில் சம்மந்தமான தேர்தலில், ஓட்டு போட வரவில்லை, என்று கோடம்பாக்கத்தில் பலர் குமுறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அஜித் வராததற்கு காரணம், அவரு படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் தான் என்று கூறப்படுகிறது.
இது ஒரு புறம் ஒருக்க, அஜித் ஓட்டு போட வராததற்கான காரணம், என்று சமூகவலைதல வாசிகள் பல குறும்புத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதில் ஒன்றில், அஜித்திடம், “நீங்கள் ஏன் ஒட்டு போட வரவில்லை” என்று கேட்டதற்கு, அவர் “அது நடிகர்கள் சங்க தேர்தல் தானே, நான் தான் நடிப்பதே இல்லையே, பிறகு அங்கு வந்து ஓட்டுப் போடுவேன்” என்று பதில் அளித்தாராம், மற்றோரு கமெண்டில், “ஞாயிற்றுக்கிழமை என்றால் அஜித் வீட்டில் பிரியாணி சமைப்பார், அதனால் தான் அவர் ஓட்டு போட வரமுடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பல கமெண்ட்களை, பல சமூகவலைதள வாசிகள் வெளியிட்டு வருகிறார்கள். இந்த கமெண்ட்களுக்கு அஜித்தின் நெட் படை எந்த மாதிரியான பதிலடி கொடுக்கப் போகிறதோ!

Comments