21st of October 2015
சென்னை:கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின்
தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றது. இதில்
தலைவராக நாசரும், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் வெற்றி
பெற்றுள்ளனர். மேலும், கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் துணைத் தலைவர்களாக
வெற்றி பெற்றுள்ளனர்.
விரைவில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட உள்ள நிலையில், நடிகர் சங்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்க புதிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
ரஜினிகாந்தை நடிகர் சங்கத்தின் கவுரவ தலைவராகவும், கமல்ஹாசனை கவுரவ ஆலோசகராகவும் நியமிக்கலாமா?, அல்லது இருவரையும் கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கலாமா? என்று நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் சங்க நிர்வாகிகள், ரஜினி மற்றும் கமலுக்கு முக்கிய பொருப்புகளை வழங்கினாலும், அதை அவர்கள் ஏற்பார்களா அல்லது நிராகரிப்பார்களா? என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments
Post a Comment