24th of October 2015
சென்னை:ஸ்ரீகாந்த் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ மற்றும் அவரது சொந்த தயாரிப்பில் நடித்துள்ள ‘நம்பியார்’ என இரண்டு படங்கள் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசாக தயார் நிலையில் இருந்தாலும் வியாபாரம் ஆகாமல் கிடப்பில் இருந்தன. இந்த நிலையில் ஸ்ரீகாந்த் தற்போது நடித்துள்ள ‘சௌகார்பேட்டை’ பேட்டை படம் படப்பிடிப்பில் இருந்தபோதே பிசினஸ் ஆனது. அந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது.
இந்த நேரத்தில் ஸ்ரீகாந்த் நடித்த, ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தை வரும் அக்-3௦ல் ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர்கள் முடிவுசெய்துள்ளனர். இதுவும் ஒரு ஹாரர் படம் தான். ஸ்ரீகாந்துடன் ஜோடியாக நீலம் உபாத்யாயா நடித்திருக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இப்படத்தில் ‘வவ்வால் பாண்டி’யாக முழுநீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறாராம்
இந்தப்படத்தை இயக்கியுள்ள டி.சூர்யபிரபாகர், எஸ்.ஜே.சூர்யா, எம்.ராஜேஸ் ஆகியோரிடம் பணிபுரிந்தவர். வழக்கமாக தணிக்கைத் துறையினர் திகில் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள். ஆனால் படத்தை குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள் என்பதால் இந்தப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள் என்பது படத்தின் சிறப்பு..
Comments
Post a Comment