பிளஸ் 2 தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவி சினிமாவில் நாயகியானார்!!!

21st of October 2015
சென்னை:பெற்றோர்கள் தவறால், திசை மாறும் பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும் படம் ‘பள்ளிக்கூடம் போகாமலே’. பெஸ்ட் ரிலீஸ் என்ற நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.ஈ.பி.தம்பி மற்றும் எஸ்.மகேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பள்ளிக்கூடம் போகாமலே’.

இப்படத்தில் மலையாள நடிகர் அலெக்ஸின் மகன் தேஜஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். நாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர் கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200க்கு 1200 எடுத்து முதல் இடத்தைப் பிடித்தாராம். இவர்களுடன் திலீபன் புகழேந்தி, கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீஹரி, ராஜ்கபூர், தேவதர்ஷினி, எ.வெங்கடேஷ், ஓ.ஏ.கே.சுந்தர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிக்கிறார்கள்.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, சாம்சன் கோட்டூர் இசையமைக்க, நா.முத்துக்குமார், விவேகா, பி.ஜெயசீலன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். சிவா யாதவ் கலைத் துறையை கவனிக்க, தளபதி தினேஷ் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை கவனிக்க, காதல் கந்தாஸ், ஹபீப், தருண்ராஜ் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். டி.வி.சசி தயாரிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பி.ஜெயசீலன் இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “குழந்தைகள் தோல்வி பயத்தால் தற்கொலை முடிவு எடுக்க கூடாது என்பதுதான், இந்த படத்தின் கரு. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை படிப்பதற்காக அவர்களை துன்புறுத்த கூடாது. பள்ளிகளும் தங்களது பள்ளி மதிப்பெண்ணில் முதலிடம் எடுக்க வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை துன்புறுத்த கூடாது என்பதுதான்  இந்த படத்தின் கதை.பெற்றோர்கள் தவறால் பிள்ளைகள் எப்படி திசை மாறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்” என்றார்.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படம் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது.

Comments