6th of September 2015
சென்னை:அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘தல 56’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் பாலிவுட்டை சேர்ந்த இரு வில்லன்கள் நடிக்கிறார்கள். ஒருவர் கபீர் துகன் சிங் மற்றொருவர் ராகுல் தேவ். இதில் ராகுல் தேவ் விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். இது அவரின் இரண்டாவது படம். இவர்களுடன் ஸ்ருதி, லட்சுமி மேனன், சூரி உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படப்பிடிப்பு நடுவே நடைபெற்ற சுவாரஸ்ய தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம். அவை…
- சென்னையிலுள்ள ஹாஸ்பிட்டல் ஒன்றில் அஜித் வில்லன் ராகுல் தேவுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள மால் ஒன்றில் அஜித், ஸ்ருதி, லட்சுமி மேனன் ஆகிய மூவரும் யாரோ ஒருவரை தேடுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டன.
- படப்பிடிப்பில் ஸ்ருதியின் நடிப்பை பார்த்த அஜித்… ‘‘கமல் சார் பொண்ணுன்னு நிரூபிச்சிட்டீங்க!’’ என மனதாரப் பாராட்டினாராம். இப்படி தானாகவே தன் சக நடிகர்களை பாராட்டுவதிலும் மதிப்பதிலும் அஜித்தை பார்த்த ஸ்ருதி.. ‘‘அஜித் சார் என்னோட ஃபேவரிட் ஸ்டார்” என்கிறார்.
- அதுபோல ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது வேறு ஒரு தயாரிப்பாளரோ இயக்குனரோ அஜித்தை சந்திக்க விரும்பினால் அஜித் அவர்களை சந்திக்க மறுத்துவிடுவாராம். அதற்கு காரணம் “இங்கே இந்த படத்துக்காக சம்பளம் வாங்கிட்டு அடுத்த படத்தை பற்றி பேசுவது சரியல்ல. அப்புறம் வெளியில் சந்திக்கலாம்” என்று கூறிவிடுவாராம்.
- அஜித் எடுத்த புகைப்படங்களை தன் அப்பா கமல்ஹாசனிடம் காண்பித்தாராம் ஸ்ருதிஹாசன். படத்தை பார்த்த கமல் மிகவும் மகிழ்ந்துள்ளார்.
- படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கேமராவுடன் திரியும் அஜித் விரைவில் புரொஃபஷனல் போட்டோ கிராபி ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்க இருக்கிறாராம். போட்டோ ஜர்னலிஸ்டாக ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் தல.
Comments
Post a Comment