8th of September 2015
சென்னை:தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக, கவர்ச்சி நடிகை
அல்போன்சாவின் தாய் கொடுத்த புகாரையடுத்து, நடிகையை போலீசார் தேடி
வருகின்றனர்.
ரஜினி நடித்த, 'பாட்ஷா' மற்றும் நடிகர் கமல் ஹாசனின்,
'பஞ்ச தந்திரம்' போன்ற, 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளவர்
நடிகை அல்போன்சா.கணவர் ஜெய்சங்கருடன், சென்னை, வளசரவாக்கத்தில், தாய் ஓமனா
வீட்டில் வசித்து வந்தார். சமீப காலமாக, பட வாய்ப்பு இல்லாததால், தாயுடன்
அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, அல்போன்சாவுக்கும், அவரது
தாய்க்கும் ஏற்பட்ட மோதலில், தாயை அல்போன்சா அடித்து உள்ளார்.
இதனால்,
ஆத்திரமடைந்த அவரது தாய், அல்போன்சாவின் அடாவடி குறித்து, ராமாபுரம்
போலீசில் புகார் செய்துள்ளார்; போலீசார் சமரசம் செய்து வைத்து உள்ளனர்.
அதன் பின், தாய் வீட்டிலிருந்து அல்போன்சா வெளியேறி உள்ளார். இந்நிலையில்,
அல்போன்சா மீண்டும் வீட்டிற்கு வந்து, தாயை அடித்ததுடன், வீட்டில் உள்ள
பொருட்களையும் நொறுக்கியதாக, தாய் ஓமனா மீண்டும் போலீசில் புகார் கொடுத்து
உள்ளார்.
இதையடுத்து, தலைமறைவான அல்போன்சாவை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments
Post a Comment