மச்சினியை விதவிதமாய் போட்டோ எடுத்த அஜித்!!!

7th of September 2015
சென்னை:சினிமா துறையில் இருக்கும் ஒருவர் அத்துறையை சார்ந்த அனைத்திலும் தன்னை நிரூபிக்க ஏதாவது ஒன்றை செய்து வருவர். ஆனால் அஜித், தன் துறை அல்லாது மற்ற துறைகளிலும் தன் ஆற்றலை நிரூபித்து வருபவர். இவர் பைக் ரேஸ், கார் ரேஸ், விமானம் ஓட்டுதல் மற்றும் போட்டோ ஜர்னலிஸம் போன்றவற்றில் திறமை வாய்ந்தவர்.

சமீபத்தல் இவருடன் பணியாற்றிய நடிகர் அப்புக்குட்டியை வைத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார். இது இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஸ்ருதிஹாசனையும் விதவிதமாய் போட்டோ எடுத்தார்.
 
இந்நிலையில் தற்போது தன் மனைவி ஷாலினியின் தங்கையும் நடிகையுமான ஷாம்லியை போட்டோ சூட் செய்தார். தற்போது ஷாம்லி தனுசுடன் ஒரு படம் மற்றும் விக்ரம் பிரபுவுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, 50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments