என்னோடு சாப்பிடுங்கள்” – கபிலனுக்கு உணவு பரிமாறிய கபாலி!!!

27th of September 2015
சென்னை:பாடலாசிரியர் கபிலனுடன் சூப்பர்ஸ்டார் மதிய உணவு அருந்தினார் என ஒரு வரியில் சொல்லிவிட்டுப்போகின்ற சாதாரண செய்தி இல்லை இது.. காரணம் கபிலனின் பார்வையில் மகத்தான் நிகழ்வு இது.. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘கபாலி’ படத்தில் கபிலன் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். ஏற்கனவே ‘சந்திரமுகி படத்தில் ‘அண்ணனோட பாட்டு’ பாடலை ரஜினிக்காக எழுதி ஹிட்டாக்கியவர்தான் கபிலன்.
சமீபத்தில் ரஞ்சித்தின் அழைப்பை ஏற்று, ‘கபாலி’ படப்பிப்பு தளத்திற்கு வந்தார் கபிலன். கபிலனை பார்த்ததும் சூப்பர்ஸ்டார் அவரை அன்போடு வரவேற்றுள்ளார். அவரிடம் கபிலன் எழுதிய பாடல்கள், மகாபாரதம், இலக்கியம் என பல விஷயங்கள் பற்றி பேசினாராம் சூப்பர்ஸ்டார்..

மதிய உணவு இடைவேளையின்போது கபிலனை தன்னுடன் சாப்பிட அழைத்தார் இயக்குனர் ரஞ்சித்… ஆனால் ரஜினியோ, “நோ.. நோ. கபிலன் என்னோட சாப்பிடட்டும்” என்று கூறி தன்னுடன் அமர வைத்தாராம். தான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவதாக கபிலன் சொல்ல, “நோ ப்ராப்ளம்.. அதுவும் கூட எங்க வீட்டில் இருந்து வந்திருக்கே” என அவருக்கு பரிமாறிவிட்டு, ஒரு லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு தொடர்ந்து கபிலனுடன் உரையாடிக்கொண்டே சாப்பிட்டாராம் ரஜினி.. 
 

Comments