நடிகர் கிருஷ்ணாவுக்கு நடிகையுடன் தொடர்பு: மனைவி புகார்!!!

19th of September 2015
சென்னை:வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக, நடிகர் கிருஷ்ணா மீது, அவரது மனைவி ஹேமலதா, போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், நடிகை ஒருவருடன் உள்ள தொடர்பு குறித்து கேட்டதால், கணவர், மாமனார், மாமியார் சேர்ந்து, தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் ஹேமலதா கூறியுள்ளார்.

கழுகு, யாமிருக்க பயமேன், யட்சன்' உள்ளிட்ட தமிழ் சினிமா படங்களில், நாயகனாக நடித்தவர் கிருஷ்ணா, 37. இவர், பிரபல திரைப்பட இயக்குனர், விஷ்ணுவர்தனின் சகோதரர்.
கோவை, மேட்டுப்பாளையம், பெத்திக்குட்டையைச் சேர்ந்த ஹேமலதாவை, 29, கிருஷ்ணா காதலித்து வந்தார். இதையடுத்து, 2014, பிப்., 6ம் தேதி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணா மீது, ஹேமலதா வரதட்சணை புகார் அளித்துள்ளார். கோவை, துடியலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
திருமணத்தின் போது, கிருஷ்ணா தரப்பினர், 300 சவரன் நகைகளை, வரதட்சணையாகக் கேட்டனர். அதில், 118 சவரன் நகை, 35 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பெற்றோர் கொடுத்தனர்.
கிருஷ்ணாவுக்கு, நடிகை ஒருவருடன் தொடர்பு உள்ளது. இதுகுறித்து கேட்டபோது, ஆத்திரமடைந்த கிருஷ்ணா, மாமனார் குணசேகர், 66, மாமியார் மதுபாலா, 62, ஆகியோர், திருமணத்தின் போது கூறியபடி, 300 சவரன் நகை மற்றும் பணத்தை கொடுத்தால் மட்டுமே, வீட்டுக்குள் வர வேண்டும் என மிரட்டி, வீட்டை விட்டு என்னை வெளியேற்றி விட்டனர்.
அவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.இன்ஸ்பெக்டர் அமுதா கூறியதாவது:நடிகர் கிருஷ்ணா மீது, ஜூனில் ஹேமலதா புகார் அளித்தார். வரதட்சணை புகார் தொடர்பாக விசாரணை நடத்த, சமூக நலத்துறைக்கு மனு அனுப்பினோம். விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகர் கிருஷ்ணா தரப்பினருக்கு அழைப்பு அனுப்பியும், ஆஜராகவில்லை.
பின், துடியலுார் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி, தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை. கிருஷ்ணா தரப்பினர் மீது வரதட்சணை கொடுமை, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Comments