நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் அணிக்கு ரஜினி ஆதரவா?

13th of September 2015
சென்னை:நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட் பாளர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபன் தெரிவித் துள்ளார்.

இந்நிலையில், விஷால் அணியினருக்கு, ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஷால் அணியினர் தங்களது ஆதரவாளர்கள் கூட்டத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டனர். அதற்காக நடிகர் நாசர், ராகவேந்திரா மண்டப நிர்வாகி மற்றும் ரஜினிகாந்திடம் அனுமதி கேட்டுச் சென்றார்.

மண்டபம் தானே? தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’” என ரஜினிகாந்த் உடனே அனுமது தந்துவிட்டார். எனவே, ரஜினியின் முழுமையான ஆதரவு நிச்சயம் விஷால் அணியினருக்குத் தான் என நம்பப்படுகிறது.

Comments