6th of September 2015
சென்னை:ஒரு டாப் ஹீரோவிற்கு கொடுக்கப்படும் சம்பளம் படத்திற்கு படம் மாறுபட வாய்ப்புள்ளது. அதுவும் தொடர்ந்து ஹிட் படங்களை அந்த குறிப்பிட்ட ஹீரோ கொடுத்துவிட்டால் அவரை தயாரிப்பாளர்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். அதன்பின்னர் தோல்வி படங்களை அந்த ஹீரோ கொடுத்தால் சம்பளம் அதே நிலையில் நீடிக்கும். மற்றபடி குறைக்கவோ ஏற்றவோ வாய்ப்பில்லை.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியளவில் வருடத்திற்கு குறைந்தது 500-600 படங்கள் வரை தயாராகிறது. இப்படங்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடு செய்யப்படுகிறது. இதில் பாதி தொகை டாப் ஹீரோக்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
இதில் உங்கள் அபிமான ஹீரோக்கள் எத்தனை கோடிகளில் சம்பளம் பெறுகிறார்கள் என்பதை இங்கே தொகுத்துள்ளோம். இதில் தென்னிந்திய நடிகர்களில் சம்பளம் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலிடத்தில் உள்ளார். இவர் கோச்சடையான் மற்றும் லிங்கா படத்திற்கு ரூ 35 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இது பிரம்மாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் படம் என்பதால் கண்டிப்பாக ரஜினிக்கு பெரிய தொகை வழங்கப்படும் எனத் தெரிகிறது,
- ரஜினியை அடுத்து கமல் தற்போது நடித்துவரும் படங்களுக்கு 25 கோடி முதல் 30 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இவர்களை தொடர்ந்து தென்னிந்தியாவின் மற்ற நடிகர்களிம் சம்பளத்தை பார்ப்போம்…
- விஜய் : ரூ 20 கோடி வரை.
- பவன் கல்யாண் : ரூ 19 கோடி வரை.
- சூர்யா : ரூ 18 கோடி வரை.
- மகேஷ் பாபு : ரூ 18 கோடி வரை.
- அஜித் : ரூ 17 கோடி வரை.
- ராம் சரண் : ரூ 14 கோடி வரை.
- விக்ரம் : ரூ 14 கோடி வரை.
- ஜுனியர் என்.டி.ஆர் : ரூ 14 கோடி வரை.
- அல்லு அர்ஜுன் : ரூ 12 கோடி வரை
- பிரபாஸ் : ரூ 12 கோடி வரை
- தனுஷ் : ரூ 10 கோடி வரை
- கார்த்தி : ரூ 9 கோடி வரை
- சிம்பு : ரூ 8 கோடி வரை
- ரவிதேஜா : ரூ 8 கோடி வரை
- சுதீப் : ரூ 6 கோடி வரை
- புனித் ராஜ்குமார் : ரூ 5 கோடி வரை
Comments
Post a Comment