‘பெஸ்ட் அஜித்; ஓரங்கட்டும் விஜய்; பெருமையான சூர்யா’: ஸ்ருதி!!!

6th of September 2015
சென்னை:இந்தி திரையுலகில் கவனம் செலுத்தினாலும் தமிழ் மொழியை மறக்காதவர் ஸ்ருதிஹாசன். பாலிவுட்டில் நடித்துக் கொண்டே கோலிவுட் நாயகிகளுக்கு சவால் விடுபவர். தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இவர். இதில் விஜய்யுடன் நடித்துள்ள ‘புலி’ படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. அஜித்துடன் நடித்த ‘தல 56’ நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது இவருடன் நடித்துள்ள ஹீரோக்கள் பற்றிய கேள்விக்கு….
 
‘புலி’ படத்தில் விஜய்யுடன்...
 
“விஜய் ரொம்ப அமைதியானவர்.
ஆனால் படப்பிடிப்பில் இறங்கிவிட்டால் களை கட்டும். ஐஸ்ட் ஒரு ஸ்மைல் போதும் நம்மை எல்லாம் ஓரங்கட்டி விடுவார்.
 
‘தல 56’ படத்தில் அஜித்துடன்…
 
இதுநாள் வரை நான் சந்தித்த மனிதர்களில் அஜித் சார் பெஸ்ட். அவருடைய பழக்கம் எல்லாரிடத்திலும் ஒரே போல இருக்கும். வேறுபாடு இருக்காது”
 
‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுடன்….
 
“சூர்யாவிற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவருடன் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். சிங்கம்-3 மீண்டும் அவருடன் நடிக்க காத்திருக்கிறேன்” என்றார்.

Comments