5th of September 2015
சென்னை:சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம்
இது நம்ம ஆளு'.
பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சிம்புவின் அப்பாவும், நடிகருமான
டி.ராஜேந்தர் தயாரித்துள்ளார்.
முடியும் தருவாயில் உள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்ட
உள்ளதாகவும், அதற்கு நயன்தாரா உத்துழைப்பு கொடுக்க மறுப்பதாகவும் கூறிய
டி.ராஜேந்தர், இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்ததாக
தகவல் வெளியானது. இதையடுத்து இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் சிம்பு நயன்தாரா மீது தனது தந்தை டி.ஆர்,
எந்தவிதமான புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்ததோடு, நயன்தாராவை
என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை, என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து சம்பு மேலும் கூறுகையில், "என்னுடைய அப்பாவும், ‘இது நம்ம
ஆளு’ படத்தின் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத்தில்
நயன்தாரா குறித்து புகார் ஏதும் கூறவில்லை.
நயன்தாராவின் சம்பளப் பாக்கி ரூ. 50 லட்சம் தயாரிப்பாளர் வசம் இருந்தது.
அதை நயன்தாராவிடம் கொடுத்துவிட்டு, அவரிடம் இப்படத்தில் எடுக்க வேண்டிய
இரண்டு பாடல்களுக்காக தேதிகள் ஒதுக்கித் தருமாறு கேட்க விரும்பினோம்.
ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே, தயாரிப்பாளர் சங்கத்திடம் அந்த தொகையை கொடுத்து, நயன்தாராவிடம்
ஒப்படைத்து, தங்களுக்கு தேதிகள் ஒதுக்கித் தர நயன்தாராவிடம் கேட்குமாறு
கூறினோம். இது ஒரு வேண்டுகோளாக வைத்தோமே தவிர, அவர்மீது நாங்கள் புகார்
எதுவுமே கூறவில்லை.
நயன்தாரா இந்த பாடல்களுக்கு நடிக்க ஒப்புக்கொண்டால், பாடல்களை
படமாக்குவோம். இல்லையென்றால், படத்தை அந்த பாடல்கள் இல்லாமலேயே
வெளியிடுவோம். நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. என்னுடைய
புதிய படமும், இனி வரும் படங்களும்தான் என்னுடைய மனதில் உள்ளது. நயன்தாரா,
எனக்கு எப்போதுமே நல்ல தோழியாக இருந்திருக்கிறார். இனியும் இருப்பார்"
என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment