இரண்டு நண்பர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் ‘தோழா’!!!

19th of September 2015
சென்னை:கார்த்தி – நாகார்ஜுனா என்கிற காம்பினேஷனை பார்க்கும்போதே தமிழ்சினிமாவுக்கு உண்மையிலேயே ஒரு அசத்தலான கூட்டணி கிடைத்துவிட்டது என்கிற சந்தோசம் தான் ஏற்பட்டது… தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து நடிக்கும் இந்தப்படத்திற்கு ‘தோழா’ என பெயர் வைத்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்.. இது கார்த்தியுடன் அவருக்கு மூன்றாவது படம்.. தவிர பிரகாஷ்ராஜ், ஜெயசுதா மற்றும் முக்கியமான் வேடத்தில் விவேக்கும் நடிக்கிறார்கள். இந்த மல்டி ஸ்டாரர் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இவர் தான் கடந்த வருடம் ராம்சரணை வைத்து சூப்பர் ஹிட்டான ‘எவடு’ படத்தை இயக்கியவர்.

இரண்டு பேருக்கு இடையிலான நட்பையும் இந்த இருவரையும் இணைக்கும் பொதுவான அம்சத்தையும் மையப்படுத்தி கதை பின்னியிருக்கிறார்கள். நாகார்ஜுனாவுக்கென தமிழில் எப்போதும் ஒரு இடம் இருக்கிறது. கார்த்திக்கு தெலுங்கில் கொஞ்சம் கொஞ்சமாக மவுசு கூடிகொண்டே வருகிறது. அதனால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக இருக்கும் இந்தப்படத்தை பிவிபி சினிமா பிரமாண்டமாக தயாரிக்கிறது. 

Comments