தனுஷ் படத்தில் லட்சுமி மேனன் – ஷாம்லி!!!

5th of September 2015
சென்னை:காக்கி சட்டை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் தனுஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் என்பது தெரியும் தானே.. இதில் தனுஷ் அண்ணன் தம்பி என முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.. இந்தப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க, எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

இதில் அண்ணன் கேரக்டருக்கு லட்சுமி மேனனும், தம்பிக்கு (பேபி) ஷாம்லியும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள்.. குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்த ஷாம்லி, இப்போது ஹீரோயினாக தமிழ்சினிமாவில் தனது புதிய இன்னிங்சை தொடங்கியுள்ளார். இது தவிர விக்ரம்பிரபு நடிக்கும் வீர சிவாஜியிலும் கதாநாயகியாக நடிக்கிறார் ஷாம்லி.

Comments