ரீமேக் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பட ரீமேக்கிற்கு போட்டி!!!!

6th of September 2015
சென்னை:கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியானது மோகன் ராஜா இயக்கிய ‘தனி ஒருவன்’. படத்திற்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என அவரே நினைத்திருக்கமாட்டார். சிட்டி முதல் பட்டிதொட்டி வரை எங்கும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. நேற்று வெளியான ‘பாயும் புலி’ படம் எதிர்பார்த்தளவு இல்லை என்பதால் மீண்டும் ‘தனி ஒருவன்’ திரையரங்குகளில் தனித்து நிற்கிறான்.

தென்னிந்தியாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே படத்தின் ரீமேக் உரிமைக்கு போட்டி துவங்கியுள்ளது. ரீமேக் ராஜா என்றழைக்கப்பட்ட ஜெயம் ராஜாவின் சொந்த படைப்புக்கு தற்போது ரீமேக் கேட்கிறது இந்த சினிமா உலகம். (அட! சரியாத்தான் சொல்லியிருக்காங்க…. வாழ்க்கை ஒரு வட்டம்)
இந்தி ரீமேக்கில் ஜெயம் ரவி வேடத்தில் சல்மான் கானும், அரவிந்த் சாமி வேடத்தில் அபிஷேக் பச்சனும் நடிக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் தற்போது வரை ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன. விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளதாம். மேலும் இப்படத்தின் சக்சஸ் பார்ட்டியை நேற்று நள்ளிரவே படக்குழுவினர் கொண்டாடி தீர்த்தனர்.

Comments