தல ஆவணி அவிட்டம்; தல தீபாவளி' அஜித் ரசிகர்கள் - பாடகி சின்மயி மோதல்!!!

3rd of September 2015
சென்னை:தல' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக, சமூக வலைதளங்களில், அனல் பறக்கும் வார்த்தைகளை, பாடகி சின்மயிக்கு எதிராக, அஜித் ரசிகர்கள் பயன்படுத்துகின்றனர்.

நடிகர் மாதவன், தன் மகனுக்கு பூணுால் அணிவிக்கும் நிகழ்ச்சியை, தன்னுடைய, 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மாதவன், அவருடைய தந்தை, அவர் மகன் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'தல ஆவணி அவிட்டம், மூன்றாவது தலைமுறை - கடவுள் அனுகிரகத்தால்...' என, குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த புகைப்படத்தை, வலைதளத்தில் பகிர்ந்த பாடகி சின்மயி, 'தல என்ற சொல், குறிப்பிட்ட ஒருவருக்கு சொந்தமானது; மாற்றிக் கொள்ளுங்கள்' என, நகைச்சுவை 
யாக குறிப்பிட்டு இருந்தார். இதற்கு, அஜித் ரசிகர்கள் என்ற பெயரில், பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தன் கருத்தை சின்மயி வாபஸ் பெற வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, பாடகி சின்மயி கூறியதாவது: நகைச்சுவையாக குறிப்பிட்ட ஒரு சொல்லை, பிரபலமான நடிகரின் ரசிகர்கள் என்ற போர்வையில், சிலர் எதிர்க்கின்றனர். எனக்கு திருமணமான பின் வந்த முதல் தீபாவளியை, 'தல தீபாவளி' என, சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட போது, இதேபோல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களில், இதுபோல தேவையற்ற பிரச்னைகளை கிளப்புவதும், பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், வாடிக்கையாகி விட்டது; என் வலைதளத்தை, நான்கு லட்சம் பேர் பார்க்கின்றனர்.அவர்கள் எல்லாம், யாருடைய ரசிகர்கள் என அறிந்து கொண்டு, என் கருத்தை சொல்ல முடியாது. அச்சமூட்டும் வகை யில் கருத்துகளை வெளியிடுவதால், நான் பின்வாங்க மாட்டேன். பிரபல நடிகர்கள் யாரும், இதுபோல் நடந்து கொள்ளும்படி, ரசிகர்களுக்கு சொல்ல மாட்டார்கள். ஆனால், பிரபல நடிகர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது போல், ரசிகர்கள் என கூறிக்கொள்பவர்கள் நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments