புலி படத்தை சைனீஸ், ஜாப்பனிஷ் மொழிகளிலும் வெளியிட திட்டம்}

28th of September 2015
சென்னை.சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் பலம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த வகையில் தமிழகம், இந்தியாவை தாண்டி ரஜினிக்கு ஜப்பான் வரை ரசிகர்கள் உள்ளனர்.
 
விஜய் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தை தாண்டி, கேரளாவிலும் முன்னணி நடிகராகிவிட்டார். தற்போது புலி படத்தின் மூலம் ஹிந்தி மார்க்கெட்டை பிடிக்கவும் தீட்டம் தீட்டியுள்ளார்.
 
இதோடு மட்டுமில்லாமல், புலி படத்தை சைனீஸ், ஜாப்பனிஷ் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடவிருக்கின்றார்களாம். இதன் மூலம் விஜய்யின் ரசிகர்கள் வட்டம் இன்னும் விரிவடையும் என கூறப்படுகின்றது.

Comments