27th of September 2015
சென்னை:தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல
மொழிகளில் கவர்ச்சியாக நடித்து வந்த சோனா, இனி தான் கவர்ச்சியாக நடிக்க
மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
கவர்ச்சியாக நடித்து தனக்கே சலித்து போனதால், இனி குணச்சித்திர
வேடங்களில் மட்டுமே நடிப்பேன், என்று ரசிகர்களின் மனதில் கல்லை போட்டுள்ள
சோனா, தனது திடீர் மன மாற்றம் குறித்து கூறுகையில்,
அப்படி இப்படி என்று
கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா
மொழிகளிலுமே எல்லாப் பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.எனக்கே
கவர்ச்சியாக நடித்து போரடித்து விட்டது. இனி அப்படி இப்படி
நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். காரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க
முடுவெடுத்திருக்கிறேன்.
கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற நீங்கள்,
குணசித்திர கேரக்டர்ன்னு வரும் போது சோனா என்று எழுதி என்னை அழையுங்கள்
நான் நல்ல காரக்டர்களில் நடிக்க காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment