இளவரசனுடன் மூன்று நாயகிகள் இணையும் ‘பிரம்மோற்சவம்’!!!

19th of September 2015
சென்னை:டோலிவுட் இளவரசன் மகேஷ்பாபு நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘செல்வந்தன்’ படத்தை தொடர்ந்து தமிழிலும் அவருக்கான வரவேற்பு இருப்பது நன்றாகவே புலனாகியுள்ளது. அதனால் மகேஷ்பாபுவின் அடுத்த படமான ‘பிரம்மோற்சவம்’ படம் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் தயாராக இருக்கிறது.. ஸ்ரீகாந்த் அத்தலா இயக்கும் இந்தப்படத்தின் பூஜை திருப்பதியில் நடைபெற்றது.

இந்தப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், பிரணீதா என மூன்று கதாநாயகிகள்.. பாகுபலியின் வெற்றியை தொடர்ந்து சத்யராஜ் தங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதையே தெலுங்கில் பலரும் கவுரமாக நினைக்க ஆரம்பித்துவிட்டதால், இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டர் ஒன்ரில் அவரும் நடிக்கிறார். ‘எந்திரன்’ புகழ் ராண்டி என்கிற ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தை பிவிபி சினிமாஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

Comments