நயன்தாரா ஒத்துழைக்க மறுக்கிறார் : டி.ஆர் புகார்!!!

2nd of September 2015
சென்னை:சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவாக்கி வரும் படம் 'இது நம்ம ஆளு'. பசங்க பாண்டிராஜ் இயக்கம் இப்படத்தை சிம்புவின் அப்பாவும், நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.

75 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள இப்படத்தின், எஞ்சிய படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள நயன்தாரா மறுப்பதாக, டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
 
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
‘‘என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது. ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. 
இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார். பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம். 
நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும். நயன்தாராவிடம், சிம்பு ‘கால்ஷீட்’ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தைப் பொருத்தவரை சிம்பு நடிகர்தான். அவர் மீது வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அந்த புகாரில் டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார். 

Comments