விஜய்யின் 59வது படத்தின் டைட்டில் 'வெற்றி'?

13th of September 2015
சென்னை:விஜய்யின் புலி படம் ஒரு பக்கம் மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தையடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.

முதலில் இப்படத்திற்கு ரஜினி நடித்த 'மூன்று முகம்' படத்தின் டைட்டிலை பரிசீலிக்கப்பட்டதாக செய்திகள் வர அதை உடனே அட்லீ மறுத்திருந்தார்.  இந்நிலையில் கடந்த 1984ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த 'வெற்றி' படத்தின் டைட்டிலை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெற்றி மேல் வெற்றி படைத்துவரும் விஜய்க்கு இப்பட பெயர் பொருத்தமாக இருக்கும் என பலர் கூறிவருகின்றனர்.  

Comments