6th of September 2015
சென்னை:சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' என்று அழைக்கப்படும் திரைப்படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வ டைட்டில் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த படத்திற்கு 'அடங்காதவன்' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அஜீத்தின் விக்கிபீடியா பக்கத்திலும்
இதுவரை 'தல 56' என்றுதான் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்று முதல் அந்த இடத்தில் 'அடங்காதவன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் டைட்டிலை வரும் 17ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி தினத்தில் அதிகாரபூர்வமாக படக்குழுவினர்களால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி, ராகுல்தேவ், கபீர்சிங் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். முதல்முறையாக அஜீத் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment