புதிய கேரக்டரில் சூர்யா நடிக்கும் சிங்கம் 3!!!

6th of September 2015
சென்னை:தான் ஏற்கும் வேடங்களில் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடிப்பவர்கள் ஒரு சில நடிகர்களே. அதில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. ‘மாஸ்’ படத்தில் பேய் வேடம் ஏற்ற இவர் விக்ரம்குமார் இயக்கும் ‘24’ படத்தில் மாறுப்பட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ‘சிங்கம் 3’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சூர்யா. ஹரி இயக்கிய இதன் இரண்டு பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதன் முதல் பாகத்தில் இன்ஸ்பெக்டர் துரை சிங்கம் பதவி உயர்வு பெற்று போலீஸ் கமிஷனர் ஆகிவிடுவார். இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா படிக்கும் பள்ளியில் தேசிய மாணவர் படை ஆசிரியராக இருப்பார். ஆனால் போதை கடத்தல் கும்பலை கண்டுபிடிப்பதற்காக அவர் அந்த வேடம் ஏற்றிருப்பார் என்பது பின்னர் தெரிய வரும்.

இந்நிலையில் ‘சிங்கம்-3’ படத்தில் இந்திய காவல்துறை அதிகாரி (சிஐடி) வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம் சூர்யா. மேலும் இப்படத்தில் ஜாக்கிசான் படங்களை போன்று சாகச சண்டைகளை செய்யவிருக்கிறார் சூர்யா. இதற்காக பெரும்பாலான காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments