17th of September 2015
சென்னை:பாலாவுக்கும் சசிக்குமாருக்கும் ராசியான ஏரியா கிராமம் தான் என்பதால், தற்போது பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘தாரை தப்பட்டை’ படமும் கிராமத்து பின்னணியில் தான் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் துவக்கத்தில் இப்படத்தின் படபபிடிப்பு சென்னையில் துவங்கி, தொடர்ந்து தஞ்சாவூரிலும் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் நடைபெற்று வந்தது.
பல நாட்களாக கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்ப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப்படத்திற்காக பாலா கிட்டத்தட்ட 13௦ நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1௦௦௦வது படம் என்பது படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும். கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
Comments
Post a Comment