18th of August 2015
சென்னை:சினிமாவை பொருத்தவரை, படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பணம் தான்
பிரச்சினையாக இருக்கும். ஆனால், தற்போது அதை தவிற மற்ற அனைத்தும்
பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினை முன்னணி நடிகர்கள் நடிக்கும்
படத்திற்கு வருவதுதான் பெரும் சோகம்.
அந்த சோக பட்டியலில் சமீபகாலமாகவே ரஜினி பிரசன்ட் ஆகிவிடுகிறார். ஆம், லிங்கா படத்தின் கதை என்று ஒருவர் போர்கொடி, தூக்கியதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த பிரச்சினை ஒரு வழியாக முடிந்து படம் வெளியானால், அதைவிடவும் பெரிய பிரச்சினையை ரஜினி சந்தித்தார். அது வெற கதை, இப்போ ரஜினியின் புதுப்படத்திற்கு புது கதை ஒன்று உருவாகியுள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு 'கபாலி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அறிவித்து அரை நாள் கூட ஆகல, அதுக்குள்ளே 'கபாலி' என்னுடைய தலைப்பு என்று ஒருவர் கண்ணீர் விட ஆரம்பித்துள்ளார்.
ஆம், 'கபாலி' என்ற தலைப்பில் ஒருவர் ஏற்கனவே படம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம். மைசூரைச் செர்ந்டாஹ் சிவக்குமார் என்பவர், தானே தயாரித்து ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் இந்த படத்திற்கு 'கபாலி' என்று தலைப்பு வைக்கபப்ட்டுள்ளதாம். சில ஆண்டுகளாகவே கபாலி படத்தை எடுத்துக்கொண்டிருக்கும் சிவக்குமார், தன்னிடம் பணம் இருக்கும் போதெல்லாம் படப்பிடிப்பு நடத்தி வருகிறாராம். அப்படி நடத்தி இதுவரை 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துள்ள அவர் கடந்த 2012ஆம் ஆண்டு இப்படத்தின் இசை வெளியீட்டையும் நடத்தியுள்ளார்.
இதற்கான புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டுள்ள அவரிடம், தலைப்பை முறைப்படி தலைப்பை புதுப்பிக்க தவறியதால் தான் தற்போது அந்த தலைப்பு கைமாறியுள்ளதாக கூறப்படுகிறதே, என்றதற்கு, நான் பல லட்சங்கள் செலவு செய்து படமெடுத்துக் கொண்டிருக்கிறேன், 500 ரூபாய் கட்டி பெயரை புதுப்பிக்க மாட்டேனா நான் புதுப்பிக்க சென்ற போதெல்லாம், அதை ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர், என்று கூறிய அவர் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வருகிறார்.
சிவக்குமாரின் புலம்பல், விரைவில் கோடம்பாக்கத்தில் புது பஞ்சாயத்துக்கு வழிவகுக்கும் என்பது மட்டும் உறுதி.

Comments
Post a Comment