Valla Desam Audio & Trailer Launch Stills!!! வல்லதேசம் இசை வெளியீட்டு விழா: அனுஹாசனுக்கு கமல் பாராட்டு!!!

2nd of August 2015
சென்னை:Tags : Bharathiraja at Valla Desam Audio Release Gallery, Valla Desam Songs Launch Event Stills, Valla Desam Movie Audio Release Photos, Kamal Haasan at Valla Desam Audio CD Launch Pictures, Valla Desam Audio Release Function images,
 
சுஹாசினி மணிரத்னம் இயக்கிய ‘இந்திரா’ படத்தில் நடித்த அனுஹாசன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ள படம் ‘வல்லதேசம்’. லண்டனை சேர்ந்த இலங்கை தமிழரான என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு லண்டனிலும், 30 சதவிகித படப்பிடிப்பு இந்தியாவிலும் நடைபெற்றுள்ளது.
















கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள இப்படத்தில் அனுஹாசன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக அமைந்துள்ள இப்படத்தில் அனுஹாசனுடன் நாசர், டேவிட், பாலாசிங், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், மாய தவசி என பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் எல்.வி.முத்துகுமாரசாமி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இவர் சிம்புவின் உறவு வழி சகோதரர் ஆவார். சிம்புவும் இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் அனுஹாசன், அனுஹாசனின் அண்ணன் கமல்ஹாசன், ‘யுடிவி’ தனஞ்சயன், நடிகர் பாலாசிங், ‘ஆடுகளம்’ ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கமல்ஹாசன் ஆடியோவை வெளியிட்டு பேசும்போது, ‘‘கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இப்போது அதிகமாக வருவதில்லை. ஒரு காலத்தில் என் குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய படங்களை எடுத்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நிறைய வரவேண்டும். அந்த வகையில் ‘வல்லதேசம்’ படம் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படமாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் காட்சிகளை பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. ஆங்கில படங்களுக்கு இணையான காட்சி அமைப்புகளுடன் இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுஹாசன் மற்றும் இப்பட குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்’’ என்றார்.

Comments