11th of August 2015
சென்னை:வருடத்திற்கு ஒன்று, அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒன்று என படம் கொடுத்த கமல், கடந்த ஒரு வருடமாகதனது விதிகளை எல்லாம் தளர்த்தி, இருபது வருடத்திற்கு முந்தைய கமலாக மாறி விட்டார். உத்தமவில்லன் ரிலீசான சூட்டோடு பாபநாசத்தை முடித்தார்.. பாபநாசம் ரிலீசுக்கு முன்பே ‘தூங்காவனம்’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இதோ பாபநாசம் ரிலீஸாகி ஒருமாதமே ஆன நிலையில் ‘தூங்காவனம்’ படத்தையும் நடித்து முடித்து விட்டார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் பாபநாசம் பட்டப்படிப்பை 39 நாட்களில் முடித்த கமல், இந்தப் படத்தை 38நாட்களிலேயே முடித்து, தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.. இல்லையில்லை.. இன்னொரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதன் கடைசிநாள் படப்பிடிப்பை பிரகாஷ்ராஜ், சம்பத், யூகிசேது உட்பட படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் கமல். கமலிடம் நீண்டநாள் உதவி இயக்குனராக இருந்த ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பவர் ஜிப்ரான். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்தாலும், கமலின் மனைவியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஆஷா சரத்.
Comments
Post a Comment